பசியால் கதறிய கொடுமை.. சாப்பாட்டுக்கு காசில்ல - 2 வயது மகளை கொன்ற ஐடி ஊழியர்!
2 வயது மகளுக்கு உணவளிக்க பணமில்லாததால் தந்தை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐடி ஊழியர்
கர்நாடகா, கென்டாட்டி கிராமத்தின் ஏரியில் 2 வயது குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீஸாருக்கு அதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் உடலை மீட்ட போலீஸார் ஏரியின் அருகே நின்ற கார் மீது சந்தேகம் எழுந்து விசாரணை நடத்தியதில்,
ஒருவரை கைது செய்தனர். அதில், அவர் குஜராத்தைச் சேர்ந்த ராகுல் பர்மர்(45). 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி பாவ்யாவுடன் கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும், வாக்குமூலத்தில் "நானும் எனது மகளும் அந்த ஏரிக்கு காரில்தான் வந்தோம். காரில் அவளுடன் அதிக நேரத்தை செலவிட்டேன். அவளுடன் விளையாடினேன்.
கொலை
அவளை மனமார கட்டியணைத்து கனமனத்துடன் அவளுக்கு பிரியாவிடை கொடுத்தேன். அவளுக்கு உணவளிக்க கூட என்னிடம் பணம் இல்லை. எனவே, எனது மகளை நானே கொன்றுவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராகுல் கடந்த 6 மாதங்களாக வேலையில்லாமல் இருந்துள்ளார். பிட்காயின் வணிகத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். தொடர்ந்து, வீட்டில் உள்ள தங்க நகைகள் திருடுபோய்விட்டதாக புகாரளித்துள்ளார். ஆனால் விசாரணையில் ராகுல்தான் எடுத்துச் சென்று அடகு வைத்தது தெரிய வந்தது.
மேலும், சமீபத்தில் தனது கணவரும், மகளும் காணாமல் போய்விட்டதாக ராகுலின் மனைவி பாவ்யா போலீசாரிடம் புகாரளித்தது தெரியவந்தது.