சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை

Tamil nadu Tamil Nadu Police Madurai
By Thahir Nov 23, 2022 07:26 PM GMT
Report

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு ரத்து 

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.

இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது.

சிபிஐ தாக்கல் செய்த இந்த மனுவானது கீழமை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ தரப்பு மதுரை உயர்நீதிமன்றதில் கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை | Satankulam Father Son Murder Case

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சிபிஐ மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ரத்து செய்து, கீழமை நீதிமன்றமே தேவைப்படும் வழக்கு பிரிவுகளை சேர்க்கலாம். தேவைப்பட்டால் நீக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.