சர்ச்சையில் சிவா.. எல்லாமே அவர் போட்ட டிராமா - உண்மை உடைத்த பிரபலம்!
பிரபலம் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.
சிவா - இமான்
தமிழ் சினிமாவின் முன்னணி இசை இயக்குனரான இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார். இதனால் பல குற்றச்சாட்டுகள் சிவகார்த்திகேயன் மீது எழுந்தது, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்தார்.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, "சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சனையில் உள்ள உண்மை என்ன என்பது பத்திரிக்கையாளர்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டது அதை சரி செய்வதற்காகத்தான் அந்த போட்டோ.
இமான் சொன்ன குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என்னால் குடும்பத்தோடு இப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே இமான் சொன்னது பொய் என்பதை உணர்த்தவே சிவகார்த்திகேயன் டிராமா போட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.