நடிகர் விஜய்க்கும் அவரது மகனுக்கும் பேச்சு வார்த்தையே இல்லையா? - பகீர் கிளப்பிய பிரபலம்!

Vijay jason sanjay Tamil Actors Tamil Directors
By Vinothini Sep 02, 2023 03:30 PM GMT
Report

 திரையுலக பிரபலம் ஒருவர் நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் குறித்த தகவலை கூறியுள்ளார்.

விஜயின் மகன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர் தனது தாத்தா போல் இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்துள்ளார். இதனால் இது தொடர்பாக லண்டனில் படிக்க தொடங்கினார். இவர் படிக்கும்பொழுதே புல் தி ட்ரிக்கர் என்ற குறும்படத்தை இயக்கினார்.

no-communication-between-vijay-and-son

அதில் அவரது மேக்கிங்கும், இயக்கமும் நன்றாகவே இருந்ததாக கூறப்பட்டது. தற்பொழுது சஞ்சய் லைகா நிறுவனத்துடன் இனைந்து முதல் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கான அக்ரீமெண்ட்டில் விஜய் மகன் சஞ்சய் கையெழுத்து போடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

பிரபலம் பேட்டி

இந்நிலையில், பத்திரிகையாளர் அந்தணன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டின் ஒன்றில், "விஜய்க்கும் அவரது மகன் சஞ்சய்க்கும் பேச்சுவார்த்தை இல்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்கள். அதேபோல் சஞ்சய் இயக்குநர் ஆவது விஜய்க்கு தெரியாது என்பது உண்மை. சஞ்சய் தனது தாயுடன் லண்டனில் இருக்கிறார்.

no-communication-between-vijay-and-son

லண்டனில் இருக்கும் அவரது தாத்தா பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார். லைகா சுபாஸ்கரனும், அவரும் நண்பர்கள். எனவே அவரேக்கூட நேரடியாக சுபாஸ்கரனிடம் பேசி தம்பியை வைத்து படம் செய்யுங்கள் என சொல்லியிருக்கலாம்.

அவரது சப்போர்ட் சஞ்சய்க்கு இருக்கிறது. அதேபோல் இந்தப் பக்கம் இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரின் சப்போர்ட்டும் சஞ்சய்க்கு உண்டு" என்று கூறியுள்ளார்.