இதுவரைக்கும் ரெடினை காமெடி பீஸா தான் பாத்திருப்பீங்க.. ஆனா இவர் மூளைக்காரர் - சீக்ரெட் சொன்ன பிரபலம்!
காமெடி நடிகர் ரெடின் குறித்து திரையுலக பிரபலம் ஒருவர் பல ரகசிய தகவல்களை கூறியுள்ளார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி
தமிழ் சினிமாவின் இயக்குநர் நெல்சனின் நண்பரான ரெடின் கிங்ஸ்லி 2010ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா நடித்த வேட்டை மன்னன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பாதியில் நின்றது, பின்னர், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார், பிறகு ஆர்.ஜே.பாலாஜியுடன் எல்கேஜி பாத்தில் நடித்தார்.
ஆனால் பெரிதாக அவர் அறியப்படவில்லை. இதன்பிறகு, நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார், அதில் இவரது நடிப்பு மற்றும் முக பாவனைகளால் பலரை சிரிக்கவைத்து ரசிகர்களை ஈர்த்தார். தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
பிரபலம் வெளியிட்ட தகவல்
இந்நிலையில், நடிகர் ரெடின் குறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர், "ரெடின் கிங்ஸ்லியை அனைவரும் ஒரு காமெடி பீஸ் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர் பெரிய மூளைக்காரன். தமிழ் நாட்டில் நடக்கும் அனைத்து பொருட்காட்சியிலும் அரசுக்கு வரும் வருமானத்தை விட கூடுதலாக பல மடங்கு வருமானம் பெருபவர் ரெடின் கிங்ஸ்லி.
பொருட்காட்சியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர் இவர் தான். சமீபத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரு பொருட்காட்சி நடந்தது அந்த பொருட்காட்சியை நடத்தியவர் ரெடின் கிங்ஸ்லி தான். இவரிடம் 300க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.
மேலும், பல தொழிலதிபர்களிடம் இல்லாத விலை உயர்ந்த சொகுசு காரை இவர் வைத்து இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஓய்வில் இருக்கும் போதும் பிஸ்னஸ் பற்றித்தான் பேசிக்கொண்டு இருப்பார். கிட்டத்தட்ட 30 வருடத்திற்கும் மேலாக இந்த தொழிலில் ரெடின் கிங்ஸ்லி இருந்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.