இமானுக்கு சிவா செஞ்ச துரோகம்; ஆதாரத்தை நானே பார்த்தேன் - பகீர் கிளப்பிய பிரபலம்!
சிவா - இமான் விவகாரம் குறித்த தகவல்களை பிஸ்மி பகிர்ந்துள்ளார்.
சிவா - இமான்
டி.இமான் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அதை தன்னால் வெளியில் கூற முடியாது. இதனால், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது எனப் பேசியிருந்தார்.
இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசினார். கள்ள உறவில் பழக்கம் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொண்டேன் என்று நினைக்க வேண்டாம் என இமான் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.
பகீர் தகவல்
இமான் வைத்த குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பிஸ்மி, "டி.இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை முதலில் நான் தான் பொதுவெளிக்கு கொண்டு வந்தேன்.
இமான் சொல்வதை பொய் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதனை சிவகார்த்திகேயன் ஏன் இன்னும் மறுக்கவில்லை. சிவகார்த்திகேயன் - இமான் விவகாரத்தில் ஆதாரத்தை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன்” எனக் கூறி மீண்டும் சர்சையை கிளப்பியுள்ளார்.