தீவிரமாகும் பறவை காய்ச்சல்; மக்களே கவனம் - தமிழகத்தில் தீவிர நடவடிக்கை!
பறவை காய்ச்சலை தடுக்க தீவிர தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல்
அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழல் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகளவில் கோழி பண்னைகள் உள்ள
நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தடுப்பு பணி
ஆந்திராவை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கோழி பண்ணைகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன.
ஆனால், நாமக்கல்லில் தற்போது நிலவும் தட்ப வெப்பநிலைக்கு பறவை காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.