தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல்..! 3.10 லட்சம் கோழிகளை அழிக்க அரசு திட்டம்
ஜப்பானில் தீவிரமாக பரவும் பறவை காய்ச்சல் காரணமாக 3 லட்சத்திற்கும் அதிகமான கோவில்களை அகற்ற அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேகமாக பரவும் பறவை காய்ச்சல்
ஜப்பானில் கடந்த சில வாரங்களாக ஒகயாமா, ககாவா, மியாகி, அமோரி, வகயாமா, டோட்டோரி, ககோஷிமா ஆகிய மாகாணங்களில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டது.
இதனிடையே ஜப்பானின் ஆராய்ச்சி மாகாணத்தில் இயங்கி வரும் கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்து கிடந்துள்ளன.
இதையடுத்து இறந்த கோழிகளை பரிசோதனை செய்தததில் அந்த கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
கோழிகளை அழிக்க முடிவு
இதை தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாகாணம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க நோய் தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோஹிமா மாகாணத்திலும் சுமார் 34,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாகாணத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.