கவனம்; கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ் - எச்சரிக்கை விடுத்த WHO
பறவைக் காய்ச்சல் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளது.
பறவைக் காய்ச்சல்
அமெரிக்காவில், 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் கறந்த பாலில் பறவைக் காய்ச்சலை பரப்பும் எச்5என்1வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
கறந்த பாலை அருந்துவதைத் தவிர்க்குமாறும் சுத்திகரிக்கப்பட்ட பாலை அருந்துவதே பாதுகாப்பானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக எளிதாக மனிதர்களுக்குப் பரவி அவர்களைக் கொல்கிறது.
WHO எச்சரிக்கை
இது தற்போது வௌவால்கள், பூனைகள், கரடி, நரி, பென்குயின்களுக்கும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் வரிசையில் மாடு சேர்க்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, , கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதன் எதிரொலியாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாலில் இருக்கும் கொடிய கிருமிகளை சுத்திகரிப்பு மூலம் அழித்துவிடலாம்.
இது மிகவும் எளிதானதும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது அதிவேகமாக மனிதர்களுக்கு பரவுவதால் கவனமாக இருப்பது அவசியம்.