கொரோனாவை விட 100 மடங்கு அபாயகரமான தொற்று - 1000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலி!

Bird Flu Virus
By Sumathi Apr 05, 2024 09:48 AM GMT
Report

பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் கொரோனா தொற்றுநோயை ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல்

அன்டார்டிகாவில் 532 அடேலி பென்குயின்கள் இறந்துவிட்டதாக கடந்த மாதம் அங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியாளர்களின் பயணம் மூலம் தெரியவந்தது.

bird flu

இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பென்குயின் பெரும் இறப்புகளின் பின்னணியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம். H5N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான பென்குயின் மரணங்களை அடுத்து அதன் பின்னணி குறித்து அறிய, அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து நிபுணர், ஜான் ஃபுல்டன் கூறுகையில், “H5N1 தொற்றுநோய் மிகவும் தீவிரமானது.

சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல்? – அச்சத்தில் மக்கள்!

சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல்? – அச்சத்தில் மக்கள்!

நிபுணர்கள் எச்சரிக்கை

இது COVID-19 தொற்றுநோயை விட மிகவும் ஆபத்தானது. இது கோவிட் விட 100 மடங்கு மோசமாக தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவு 2003 முதல் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 நோயாளிகளில் 52 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவை விட 100 மடங்கு அபாயகரமான தொற்று - 1000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலி! | Bird Flu Killed Thousands Of Penguins Dangerous

இதன் காரணமாக அதன் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், தற்போதைய கோவிட் இறப்பு விகிதம் 0.1 சதவீதமாக உள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸால் மொத்தம் 887 வழக்குகளில் 462 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் 6 மாநிலங்களில் அதன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பசுக்கள், பூனைகள் மற்றும் மனிதர்களும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.