திடீரென கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சென்ற பில் கேட்ஸ்.. பின்னணி என்ன? - வீடியோ வைரல்!

United States of America Bill Gates
By Vinothini Nov 21, 2023 11:10 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

பிரபல தொழிலதிபர் கழிவுநீர் தொட்டிக்குள் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பில் கேட்ஸ்

நீண்ட காலம் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இயக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மைக்ரோசாப்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார். இவருக்குப் பதிலாக சத்யா நாதெல்லா தான் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

billgates

இவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின் பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது இவர் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே இணையத்திலும் பகிர்ந்துள்ளார்.

ஆண்களின் ஆயுட்காலம் குறையுதா?.. என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆண்களின் ஆயுட்காலம் குறையுதா?.. என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

வீடியோ

இந்நிலையியல், நவம்பர் 19ஆம் தேதி உலக கழிப்பறை தினம் கடைப்பிடிக்கப்படும். அதனால் அன்று பிரஸ்ஸல்ஸில் கழிவுநீர் அருங்காட்சியத்தை பார்வையிட பில் கேட்ஸ் கழிநீர் தடத்தில் இறங்கியுள்ளார். இது குறித்து, அந்த வீடியோவில், "பிரஸ்ஸல்ஸில் நிலத்திற்கு அடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தை ஆய்வு செய்தேன்.

இந்த கழிவுநீர் அமைப்பு வரலாற்று ரீதியாகப் பல கதைகளைக் கொண்டுள்ளது. கடந்த 1800களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் நேரடியாக சென்னே ஆற்றில் விடப்படும். இதனால் அப்போது காலரா போன்ற மோசமான தொற்று நோய்களும் கூட ஏற்பட்டது.

இப்போது இந்த 321 கிமீ நீளமுள்ள கழிநீர் அமைப்பில் பெறப்படும் கழிவுகளை முறையாக அவர்கள் சுத்திகரிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். கழிப்பறை தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்துள்ளார்.