மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் பில்கேட்ஸ்... பொண்ணு யார் தெரியுமா?

Bill Gates
By Petchi Avudaiappan May 03, 2022 11:51 PM GMT
Report

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இணைந்து தொண்டு அறக்கட்டளையை நிறுவி பல்வேறு நாடுகளுக்கு உதவி வருகிறார். இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு மே 3 ஆம் தேதி விவாகரத்து செய்ய இருப்பதாகவும், தொண்டு அறக்கட்டளையில் இருவரும் தொடர்ந்து இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் பில்கேட்ஸ்... பொண்ணு யார் தெரியுமா? | Bill Gates Wants To Remarry His Divorced Wife

இதனிடையே லண்டனை சேர்ந்த பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் கூறியுள்ளார். 

அவர் தனது பேட்டியில், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டமாகி போனது. சிலவற்றை உணர்த்திய காலம் இது. விவாகரத்து ஆனாலும் எங்கள் திருமணம் சிறந்த திருமணம் தான். குழந்தைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஒவ்வொரு திருமணமும் மாற்றத்தை நோக்கி செல்வதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நான் என்  முன்னாள் மனைவியுடன் இன்னும் அறக்கட்டளையில் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். எங்கள் அறக்கட்டளையின் வருடாந்திர ஊழியர் கூட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. மெலிண்டாவும் நானும் ஒன்றாக நடத்தும் வருடாந்திர கூட்டம் இதுவாகும். மெலிண்டாவுடன் இன்னும் நட்புடன் இருப்பதாக நம்புகிறேன். அவருடன் எனக்கு மிக முக்கியமான நெருக்கமான அதேசமயம் சிக்கலான உறவு இருந்தது. இருப்பினும் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தோம்.

விவாகரத்தின் தாக்கத்தில் இருந்து இருவரும் மீண்டு வருகிறோம். நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.