ரோட்டு கடையில் பில்கேட்ஸ்; அவரே பகிர்ந்த டீ விற்பனையாளர் வீடியோ - படுவைரல்!
பில்கேட்ஸ் டீ அருந்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பில்கேட்ஸ்
மைக்ரோசாப்ட்டின் துணை நிறுவனர் பில்கேட்ஸ். இவர் தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். தொடர்ந்து, பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வரிசையில், தற்போது இந்தியா வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் நாக்பூரில் சாலையோர டீக்கடை ஒன்றில் பில்கேட்ஸ் டீ குடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,
வீடியோ வைரல்
இந்தியாவில் எங்கு திரும்பினாலும் ஏதேனும் ஒரு புதுமையான விஷயத்தை பார்க்கலாம். ஒரு சாதாரண டீ தயாரிப்பில் கூட சுவாரஸியமாக செயல்படுகின்றனர். மீண்டும் இந்தியா வருகை புரிந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "ஒரு சாயா ப்ளீஸ்" என்று கூறுகிறார். உடனே டாலி சாய்வாலா தனது வேலையை தொடங்குகிறார். பின்னணியில் பார்ட்டி மியூசிக் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.