காதலியுடன் ரொமான்ஸில் உற்சாக நடனமாடிய பில் கேட்ஸ் - வைரலாகும் வீடியோ!
பில் கேட்ஸ் தனது காதலியுடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ். கடந்த 2021ல் மெலிண்டா பிரெஞ்சை விவாகரத்து செய்தார்.
அதன்பின், மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரியின் மனைவி பவுலா ஹர்ட்டை பில்கேட்ஸ் காதலிப்பதாக தகவல் வெளியானது. இருவரும் 1 வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்துவருவதாகவும் கூறப்பட்டது.
காதலியுடன் நடனம்
தொடர்ந்து, அண்மையில் லாஸ் வேகாசில் நடைபெற்ற ஓட்டலின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் இருவரும் கலந்துக் கொண்டனர். அதில், பாப் நட்சத்திரம் ஜஸ்டின் டிம்பர்லேக்கின் நேரடி நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
அதன்பின், ஜஸ்டின் டிம்பர்லேக்கின் இசைக்கு பில் கேட்ஸ் மற்றும் காதலி பவுலா ஹர்ட் நடனமாடுகின்றனர். அந்த நடனம் மிகுந்த ரொமான்ஸை வெளிப்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் தங்களது கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.