பைக்கிள் அதிவேகம்.. இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறாரா யூடியூபர் TTF..? - கண்காணிக்கும் காவல்துறை..!

Coimbatore Tamil Nadu Police
By Thahir Jul 04, 2022 04:15 PM GMT
Report

பிரபல யூடியூபர் TTF வாசன் தனது பைக்கில் 238 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில் அவர் இளைஞர்களை இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்ட துாண்டுவதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை ஈர்த்த TTF வாசன்

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பெரிதளவில் பேசப்படுபவர் TTF வாசன். யூடியூபரான இவர், தனது உயர் ரக பைக்கில் டிராவல் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

TTF Vasan

இவரை கிட்டத்தட்ட 28 லட்சம் பேர் யூடியூபில் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்த இவர் கோயம்புத்தூரில் தனது யூடியூப் சொந்தங்களுடன் ஒரு மீட் அப் வைத்திருந்தார்.

அதில் எதிர்பாராத விதமாக ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டனர். அந்த மீட் அப் தான் TTF வாசனை பெரிதளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

பைக்கில் அதிவேகம்

இப்படி 2k கிட்ஸ் மத்தியில் பெரிய செலிபிரிட்டியாக வளம் வரும் TTF வாசன், தனது பைக்கில் 238 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வீடியோவை பதிவிட்டிருந்தார், அதனை ஒரு நபர் சென்னை காவல்துறையினரை டாக் செய்து, 240+km/ மணிக்கு வேகத்தில் பைக்கை ஓட்டி யூடியூப்பில் பதிவிடுவது.

நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது மற்றவர்களையும் செய்ய தூண்டும், என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த பதிவுக்கு சென்னை காவல்துறை, 'It is noted', என பதிலளித்துள்ளது. காவல்துறையின் இந்த பதிவுக்கு TTF வாசனுக்கு சாதகமாகவும் அவரை கிண்டல் செய்தும் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.


இப்போதைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!