பைக் டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - சென்னையில் பரபரப்பு!
பைக் டாக்சியில் பயணித்த பெண்ணிடம் ஓட்டுநர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துமீறிய ஓட்டுநர்
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 19ம் தேதி இரவு பைக் டாக்சியில் பயணித்துள்ளார். அப்போது பைக் ஓட்டுநர் நடனசபாபதி என்பவர் அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு, அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்து அந்த பெண் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற நடனசபாபதி, இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
அதிரடி கைது
இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் தீவிர விசாரணை நடத்தி, குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த நடனசபாபதி என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.