தனது செலவு பட்டியலை அனுப்பிய பெண் - திருமணமே வேண்டாமென தெறித்து ஓடிய மாப்பிள்ளை!
பெண் பார்க்கும் படலத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தால் இளைஞர் ஒருவர் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
செலவு பட்டியல்
சீனாவின் ஹாங்ஸூ பகுதியை சேர்ந்தவர் 35 வயதான வாங். இவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, கடந்த வாரம் ஒரு பெண்ணை வாங் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தனது சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலை குறித்து அந்த பெண்ணிடம் வாங் தெரிவித்துள்ளார்.
அப்போது நன்றாக பேசிய பெண், அன்று மாலையிலேயே ஒரு செலவு பட்டியலை அவருக்கு அனுப்பியுள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்த பிறகு எதிர்காலத்தில் என்னென்ன செலவுகள் ஏற்படக்கூடும் என்பது குறித்து குறிப்பிட்டிருந்தார்.
அதிர்ந்த இளைஞர்
ஒரு நாளைக்கு ஆகும் செலவினங்கள் பட்டியலை பார்த்து வாங் அதிர்ச்சியடைந்துள்ளார். அதில், மளிகை சாமான், போக்குவரத்து செலவு மற்றும் துணிமணிகள் என ஒரு மாதத்திற்கு 9,900 யுவான் (இந்திய மதிப்பில் ரூ 1.15 லட்சம்) செலவாகும் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆண்டுக்கு 2 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சம்) வாங்கும் அளவுக்கு வேறு பணிக்கு செல்லுமாறும் அந்த பெண் வலியுறுத்தியதாக வாங் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன அவர் சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்வதையே தான் விரும்புவதாக கூறி திருமணம் செய்யும் முடிவை கைவிட்டுள்ளார்.