பைக் ஓட்டும்போது சுயஇன்பம் செய்த ரேபிடோ ஓட்டுநர் - அலறிய இளம்பெண்!

Bengaluru Crime
By Sumathi Jul 25, 2023 10:58 AM GMT
Report

ரேபிடோ ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேபிடோ ஓட்டுநர்

பெங்களூரைச் சேர்ந்தவர் அதிரா புருஷோத்தமன். லக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக ரேபிடோ பைக் டாக்சியை புக் செய்துள்ளார். ஆனால் புக் செய்த பைக் இல்லாமல் வேறு ஒருவர் வந்துள்ளார்.

பைக் ஓட்டும்போது சுயஇன்பம் செய்த ரேபிடோ ஓட்டுநர் - அலறிய இளம்பெண்! | Rapido Driver Arrested For Mastrubated

ஆனாலும், தான் பதிவு செய்ததை உறுதி செய்த பிறகு ரேபிடோ டாக்சியில் அதிரா ஏறியிருக்கிறார். அப்போது ஆள் நடமாற்றம் இல்லாத பகுதியில் அந்த பைக்சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கையால் பைக்கை ஓட்டிக் கொண்டே அந்த பைக் டாக்சியின் ஓட்டுநர் சுய இன்பம் செய்ய தொடங்கியுள்ளார்.

பகீர் சம்பவம் 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், குறிப்பிட்ட இடம் வருவதற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே இறங்கியுள்ளார். பின்னர் அந்த ரேபிடோ ஓட்டுநர் அங்கிருந்து சென்றுள்ளார்.

மேலும், அன்று இரவில் அந்த ஓட்டுநர் ஹார்ட், முத்தம் உள்ளிட்ட சிம்பள்களை அனுப்பியதுடன் ஐலவ் யூ மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண், தனது ட்விட்டர் பதிவில் ஓட்டுநர் தனக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்களின் ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்து போலீஸாரை டேக் செய்தார். அதனையடுத்து அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.