நடுரோட்டில் பாலியல் வன்கொடுமை - ஓடும் ஆட்டோவில் இருந்து எகிறி குதித்த இளம்பெண்
நள்ளிரவில் ஓடும் ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கடந்த சில மாதங்களாக கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியபடி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன், அந்தப் பெண் வேலை காரணமாக திருப்பூர் சென்று, இரவு கோவை திரும்பியுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் அவிநாசி சாலை ஹோப் காலேஜ் பகுதியில் இறங்கியிருக்கிறார்.
ஆட்டோ ஓட்டுநர் சில்மிஷம்
அதனைத் தொடர்ந்து, ரேபிடோ ஆப் மூலம் ஆட்டோ புக் செய்திருக்கிறார். சிறிது நேரத்தில் ஆட்டோ வர அந்த இளம்பெண், அதில் ஏறிச் சென்றிருக்கிறார். அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், ஆட்டோ ஓட்டுநர் முகமது சாதிக் (43) அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.
இதனால், அந்தப் பெண் ஆட்டோவை நிறுத்த சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால், அந்தப் பெண் ஆட்டோவிலிருந்து வெளியே குதித்து தப்பித்திருக்கிறார்.
எகிறி குதித்த பெண்
வெளியே குதித்ததில் காயமமைந்த பெண் தன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தினர்.
இதுகுறித்து, அந்தப் பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.