இளைஞரின் வயிற்றில் கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் - மிரண்ட மருத்துவர்கள்!
இளைஞரின் வயிற்றில் இருந்து கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் செய்த செயல்
பீகார், கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன்பின், எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில், அவருடைய வயிற்றில் உலோக பொருட்கள் உள்ளது தெரியவந்துள்ளது. உடனே, டாக்டர் அமித் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் சாவி வளையம், 2 சாவிகள், 4 அங்குலம் நீளமுள்ள கத்தி மற்றும் 2 நகவெட்டிகள் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் அதிர்ச்சி
இதுகுறித்து இளைஞரிடம் கேட்டதில், சமீப காலங்களாக உலோக பொருட்களை விழுங்க தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து மருத்துவர் பேசுகையில், அவருடைய நிலைமை சீராக உள்ளது. உடல்நலம் தேறி வருகிறது.
அவருக்கு சில மனநல பாதிப்புகளும் இருக்கின்றன. அதற்காக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனக் கூறியுள்ளார்.