யூனிஃபார்ம் போடலையா என கேட்ட ஆசிரியர் - வகுப்பறையிலேயே குத்தி கொலை செய்த மாணவர்
வகுப்பறையிலேயே ஆசிரியரை மாணவர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம்
அசாம் மாநிலம் சிவசேகர் நகரில் உள்ள பள்ளியில் வேதியியல் ஆசிரியரான ராஜேஷ் பருவா பெஜவாடா(55) 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவரை சரியாக படிக்காத காரணத்துக்காக கண்டித்துள்ளார். மேலும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
உடனே வகுப்பை விட்டு வெளியேறிய மாணவர் அருகில் இருந்த கடைக்கு சென்று கத்தி ஒன்றை வாங்கி விட்டு 3:15 மணிக்கு மீண்டும் சாதாரண உடையில் வகுப்பறைக்கு வந்து அமர்ந்துள்ளார். சீருடை அணியாமல் சாதாரண உடை அணித்துள்ளதை பார்த்த ஆசிரியர், மாணவனை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
கைது
இதில் கோபமடைந்த மாணவர் ஆசிரியரின் தலையை கடுமையாக தாக்கியதுடன் தான் வாங்கி வந்திருந்த கத்தியால் ஆசிரியர் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.