Friday, Jul 4, 2025

யாத்திரையை முடிக்கும்போது தமிழக்கத்தில் இது கண்டிப்பா நடக்கும் - அண்ணாமலை உறுதி!

Tamil nadu DMK BJP Chennai K. Annamalai
By Sumathi a year ago
Report

யாத்திரையை நிறைவு செய்யும்போது மிக பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் என அண்ணமலை தெரிவித்துள்ளார்.

அண்ணமலை

என் மண், என் மக்கள் எனும் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். அதன் 200-வது தொகுதி நிறைவையொட்டி, சென்னை தங்கசாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

annamalai

அதில் பேசிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருகிறோம். மக்கள் மனதில் நமது நல்லாட்சியின் அருமை தெரிகிறது. என் மண் என் மக்கள் யாத்திரையை கடும் போராட்டத்திற்கு இடையே நடத்தி வருகிறோம்.

திடீரென 6 நாள் பயணமாக லண்டன் செல்லும் அண்ணாமலை - என்ன காரணம்? பரபரப்பு தகவல்!

திடீரென 6 நாள் பயணமாக லண்டன் செல்லும் அண்ணாமலை - என்ன காரணம்? பரபரப்பு தகவல்!


அரசியல் மாற்றம் 

தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக. இந்த புண்ணிய பூமியில் இதனை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம், ஆன்மிகத்தின் பக்கம், பிரதமர் நரேந்திர மோடி பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் 60 நாட்கள் இருக்கிறது.

யாத்திரையை முடிக்கும்போது தமிழக்கத்தில் இது கண்டிப்பா நடக்கும் - அண்ணாமலை உறுதி! | Biggest Political Change In Tamilnadu Annamalai

இந்தியாவில் முக்கியமான பெரு நகரங்கள் அனைத்திலுமே பா.ஜனதா எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் மட்டும்தான் குடும்ப அரசியல் மூலம் வந்தவர்கள் எம்.பிக்களாக இருக்கிறார்கள். சென்னை நகரம் பா.ஜனதா பக்கம் வரவேண்டும்.

சென்னையின் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும். 234-வது தொகுதியில் இந்த யாத்திரையை நிறைவு செய்யும்போது ஒரு புதிய சரித்திரம் பிறக்கும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.