திடீரென 6 நாள் பயணமாக லண்டன் செல்லும் அண்ணாமலை - என்ன காரணம்? பரபரப்பு தகவல்!
அண்ணாமலை 6 நாள் பயணமாக லண்டன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் மாநிலத்தை ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். மேலும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.
லண்டன் பயணம்
அதனைத் தொடர்ந்து, தற்போது அண்ணாமலை 6 நாள் பயணமாக இன்று லண்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து அண்ணாமலை பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பயணம் என்பது அவரது தனிப்பட்ட பயணம் என்று இல்லாமல் கட்சி சார்ந்த பயணமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.