பிக் பாஸ் சீசன் 7.. வைல்டு கார்டு என்ட்ரி - தெறிக்கவிடப்போகும் போட்டியாளர்!
பிக் பாஸில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீசன் 7
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் முதல் வாரத்தில் இருந்தே சண்டையை ஆரம்பித்துவிட்டனர். தற்பொழுது டாஸ்க்குகள் நடந்து வருகிறது, அதனால் ஆட்டம் சூடு பிடிக்கிறது.
இதில் பிபி ஆக்சிஜன் எமர்ஜென்சி டாஸ்க்கில் போட்டியாளர்கள் மும்முரமாக போராடி போட்டனர். அந்த டாஸ்கில் ஒரு மோசமான சண்டை வெடித்தது. கண்மூடித்தனமாக மாறிய விஜய், பிரதீப் சண்டை போட்டனர்.
வைல்டு கார்டு என்ட்ரி
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு கலந்து கொள்ள போகிறார்களாம். அதில் ஏற்கனவே அனைவரும் சொன்னது போல நடிகை அர்ச்சனா தான். இவர் ஏற்கனவே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், இவரது பேச்சுக்கள் நாடகத்தில் அனல் பறக்கும்.
தற்பொழுது பிக் பாஸில் கலந்துனது கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆட்டம் மேலும், சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரபல பாடகர் கானா பாலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வர போவதாக தகவல்கள் வருகின்றன.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
