செட்ல ரம்பாவுடன் சண்டை.. ஒரு நொடி கூட என்னை விடாது - தேவயானி வெளிப்படை பேட்டி!
நடிகை தேவயானி ரம்பா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தேவயானி
ஒரு காலத்தில் விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு பெற்று முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகி. இவர் நடித்த படங்களில் அதிகபட்சமாக புடவை, தாவணியில் தான் நடித்திருப்பார்.

அவர் பெரிதாக எந்த கவர்ச்சிகாரமான பகுதியும் நடித்ததில்லை, அதனை தவிர்த்து வந்தார். பல நாட்கள் பிறகு தற்பொழுது சீரியலில் நடித்து வருகிறார். மேலும், இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரம்பா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "ரம்பா மிகவும் ஸ்வீட்டான ஒரு நபர் அதிர்ந்து கூட பேச மாட்டார். நான் அவருடன் நினைத்தேன் வந்தாய் படத்தில் நடித்தபோது இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் சண்டை போட்டுக் கொள்வோம் என்று பட குழுவினர் பயந்து இருக்கின்றனர். இதனை படத்தின் இயக்குனரே என்னிடம் வந்து கூறினார்.

சார் நான் ரம்பா கூட சண்டை போடுவேன்-னு நினைச்சு கூட பாக்கல.. ஆனால்.. நீங்க இப்படி சொல்றீங்க, என கூறி அனுப்பினேன். அந்த படம் தொடங்கிய நாளிலிருந்து படம் முடியும் வரை நாங்கள் இருவருமே ஒரு சகோதர சகோதரிகள் போல ஒரு நல்ல தோழிகள் போல தான் இருந்தோம்.
ஒரு நொடி கூட என்னை விடாது.. எங்களுடைய நட்பு மிகவும் ஆழமானதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஈரானுக்கு வழங்கப்பட்ட 60 நாட்கள் தடைத் தளர்வு தற்காலிகமானது...! அமெரிக்கா இறுதி எச்சரிக்கை IBC Tamil
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil