நான் இப்படி போட்டோ போட்டேன்.. அந்த மாதிரி கேட்டு மெசேஜ் பண்றாங்க - கிரண் வெளிப்படை!
நடிகை தனது அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண். இவர் அஜீத், விக்ரம், கமல் ஹாசன் போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்து வெளியானது ஒரு சில படங்கள் மட்டுமே ஆனால், அதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
நடிகை கிரண் பீக்கில் இருந்த சமயத்திலே திடீரென காணாமல் போனார். ஆனால் இவர் சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட்கள் போஸ்ட் செய்து தன்னை வெளிக்காட்டி வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "எனக்கு வந்த சில நல்ல வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன். நான் ஒருவரை காதலித்தேன். நான் மிக சீக்கிரமாகவே திருமணம் செய்து கொண்டேன். அதுதான் நான் என்னுடைய வாழ்க்கையில் எடுத்த முட்டாள்தனமான முடிவு. அதன்பின்னர் நான் வீட்டில் முடங்கினேன்.
வேலைக்கு சென்றேன் ஆனால் அவர்கள் எனக்கு வேறு விஷயத்தை தான் ஆஃபர் பண்றங்க, வேலை தர மறுகிறார்கள். சில பேர் எனக்கு இந்த ஆஃபரை தருகிறேன். அந்த ஆஃபரை தருகிறேன் என்று சொல்லி, என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் அந்த மாதிரியான பெண் அல்ல நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள்" என்று கூறியுள்ளார்.