அப்போ யாருமே கூப்பிடல.. இப்போ நான் ரெடி, கால் பண்ணுங்க மீட் பண்ணலாம் - நடிகை ஓபன் டாக்!
நடிகை கிரண் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பேசியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண். இவர் அஜீத், விக்ரம், கமல் ஹாசன் போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்து வெளியானது ஒரு சில படங்கள் மட்டுமே ஆனால், அதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
நடிகை கிரண் பீக்கில் இருந்த சமயத்திலே திடீரென காணாமல் போனார். ஆனால் இவர் சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட்கள் போஸ்ட் செய்து தன்னை வெளிக்காட்டி வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் தனக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதில், "நான் தொடர்ந்து 5 சூப்பர்ஹிட் படங்கள் செய்த பிறகும், ஒருவர் கூட என்னை படங்களுக்கு அழைக்கவில்லை. படம் நடிக்க நான் தயாராக தான் இருக்கிறேன். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் படத் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை, சென்னையை மிஸ் செய்கிறேன்.
புதிய இயக்குநர், புது கதை, புது கதாபாத்திரம் உள்ளிட்டவற்றில் நடிக்க தயராக இருக்கிறேன். ஆனால் நடிக்க தான் என்னை யாரும் அழைக்கவில்லை. நான் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். அதே போன் நம்பர் தான் வைத்து இருக்கிறேன்.
கால் செய்து என்னை மீட் செய்யலாம். கதை சொல்லாம். வேலைக்கு மட்டும் போன் செய்யுங்கள். டின்னர் சாப்பிட போன் செய்ய வேண்டாம்" என்று கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.