படுக்கையில் என்னை அப்படி.. பிக் பாஸ் மாயா மீது பாலியல் புகார் - இளம் நடிகை வெளிப்படை!
பிக் பாஸ் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாயா கிருஷ்ணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிரடியாக விளையாடி வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வானவில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மாயா கிருஷ்ணன்.
பின்னர் நடிகர் தனுஷின் தொடரி நடிகர் ஜோதிகாவின் மகளிர் மட்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் விக்ரமின் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், விக்ரம் படத்தில் சிறு ரோலில் நடித்து பிரபலமானார்.
பாலியல் தொல்லை
இந்நிலையில், மாடல் அழகியும் நடிகையுமான அனன்யா ராம் பிரசாத் மாயா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில், "மாயா கிருஷ்ணனை 2016ஆம் ஆண்டு முதன்முறையாக சந்தித்தேன். எனக்கு அப்போது 18 வயதுதான் ஆனது. அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.
ஒருகட்டத்தில் இருவரும் நெருக்கமாக பழகினோம். அப்போது நான் அவருடன் மட்டும்தான் பழக வேண்டும் என்ற ரீதியில் நடந்துகொள்ள ஆரம்பித்தார். எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுத்து என் மீது ஆதிகம் செலுத்தினார். அதேபோல் என்னுடைய பிற நண்பர்களையும் லாவகமாக துண்டித்தார். அதனால் அவர்கள் என்னை வெறுத்தனர்.
பொற்றோரையும் ஒதுக்க செய்தார். அடிக்கடி தவறான முறையில் கட்டிப்பிடித்தார், முத்தம் கொடுத்தார், படுக்கையில் பாலியல் ரீதியாக என்னை பயன்படுத்திக் கொண்டார்." என்று கூறியுள்ளார்.
ஆனால் இது பற்றி நடிகை மாயா இது அனைத்தும் பொய் என்று விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil
