ஏற்கனவே தந்தை இல்லை.. இப்போ.. பிக் பாஸ் அக்ஷரா வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம் - ஷாக்கிங்!
பிக் பாஸ் பிரபலம் அக்ஷரா ஏற்பட்ட உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி. இவர் ஒரு மாடல் அழகி, இவர் பல பேருக்கு தெரியாத முகமாகத்தான் இருந்து வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார்.
இவருடைய ஆட்டிட்யூட் பலரும் பார்த்து அதிர்ச்சியாகி இருந்தாலும் இவருடைய அழகை பார்த்து இளைஞர்கள் பட்டாளம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு அளித்து வந்தனர்.
சோகம்
இந்நிலையில், இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட பொழுது இவருக்கு ஏற்கனவே தந்தை இல்லை என்று குறிப்பிட்டுருந்தார். தந்தை சுதாகர் ரெட்டி மெட்ராஸ் ஐஐடியில் படித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு தொழில் அதிபராகவும் இருந்துள்ளார். அக்ஷரா தனது அம்மா மற்றும் அண்ணனுடன் தான் வசித்து வந்துள்ளார்.
இப்போது அவரது அம்மாவும் அண்மையில் உயிரிழந்துள்ளார். இதனால் பலர் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், மேலும், அவர் இந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.