நகைச்சுவை நடிகருக்கு மனைவியாகும் லட்சுமி மேனன் - வாழ்த்தும் ரசிகர்கள்!
நடிகை லட்சுமி மேனன் நகைச்சுவை நடிகருக்கு மனைவியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லட்சுமி மேனன்
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன்(27). தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மிருதன் படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

அதன்பின் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதனையடுத்து, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார்.
வெளியான தகவல்
இந்நிலையில், தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நடிகை லட்சுமி மேனன் யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருக்கக்கூடிய புதிய திரைப்படத்தில் அவருடைய மனைவியாக படத்தின் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனால் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு. இந்த திரைப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகும் என தெரிகிறது. இந்த படம் குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் யோகி பாபு மற்றும் லட்சுமி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
You May Like This Video
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil
மிகப் பெரிய கப்பம் வசூலிப்பவர் என்ற பெயரையும் கோட்டாபயவுக்கு பெற்றுக்கொடுத்தது அடுத்த குற்றச்சாட்டு IBC Tamil