அந்த நைட்.. நானும் நிக்ஸனும் அப்படி பண்ணியிருக்க கூடாது - பல நாட்களுக்குப் பின் ஐஸு ஓபன்டாக்!
பிக்பாஸ் குறித்து ஐஸு மனம் திறந்து பேசியுள்ளார்.
பிக்பாஸ் ஐஸு
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களாக தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அண்மையில் நிறைவு பெற்ற சீசன் 7ல் ஐஸு மற்றும் நிக்ஸன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஹாட் டாப்பிக்காக இருந்து வந்தது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு பின் பேட்டியளித்த ஐஸு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கலந்து கொள்ள போகிறேன் என்று சொன்னதும் என்னுடைய பெற்றோர் ரொம்பவே எதிர்த்தார்கள்.
ஆனால் அப்போது எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்த பிறகு அந்த நிகழ்ச்சியை பற்றி நன்றாக புரிந்து கொண்டேன். நான் இருக்கும்போது நிக்ஸனோடு விளையாடியது எனக்கு தவறாக எந்த இடத்திலும் தெரியவில்லை.
விருப்பம்
காரணம் நிக்ஸனை பொருத்தவரையில் அவருக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அது போல நிக்ஸன் மிகவும் திறமையான மனிதர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நானும் சரி நிக்ஸனும் சரி ஒருவரை ஒருவர் எங்கள் விளையாட்டை கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நான் எவிடிட்டாகி வெளியே வந்த பிறகு சில எபிசோடுகளை பார்த்த பிறகு தான் புரிந்தது.
இனிமேல் அந்த ஒரு விபரீதம் எங்கள் வாழ்க்கையில் நடக்காது. எனக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே நடந்த ஒரு சண்டையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் டிவியில் பார்க்கும்போது எனக்கே என்னை பிடிக்கவில்லை. அதனால் எனக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்தால் நான் அந்த இரவில் நடந்ததை கண்டிப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.