பிக்பாஸ் ஸ்கிரிப்டா? - உண்மையை உடைத்த பிக்பாஸ் இசைவாணி: ரசிகர்கள் அதிர்ச்சி

Bigg Boss Isaivani
By Anupriyamkumaresan Nov 24, 2021 09:36 AM GMT
Report

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடுத்த வாரம் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த வாரம் எலிமினேட் ஆன இசைவாணி, வெளியே வந்த பிறகு முதல் லைவ் வீடியோவில் மக்களோடு இணைந்துள்ளார். அதில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பளீச் பளீச் என்று பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் ஸ்கிரிப்டா? - உண்மையை உடைத்த பிக்பாஸ் இசைவாணி: ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Is Script Isaivani First Live

பல நாட்களாகவே பொதுமக்கள் பிக்பாஸ் ஸ்கிரிப்ட் தான் என்றே கருதி வருகின்றனர். பலருக்கு இது சந்தேகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கேள்வியை இசைவாணியிடம் ஒருவர் கேட்க, பிக்பாஸ் ஸ்கிரிப்ட் எல்லாம் இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் இசைவாணி பொய் உரைக்கமாட்டார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.