என் பொண்ண காப்பாத்துங்க.. பிரபல நடிகரிடம் கெஞ்சிய ஐஷுவின் தந்தை!
பிக் பாஸ் போட்டியாளரான ஐஷுவின் தந்தை பேசிய பதிவு வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதன் பின் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன் , வினுஷா, பிரதீப், அன்ன பாரதி, ஐஷு, கானா பாலா, ஆர்ஜே பிராவோ என ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதில் சிலர் தற்பொழுது மீண்டும் பிக் பாஸுக்குள் சென்றுள்ளனர். பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து ‘ப்ரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்ததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த இணையத்தலமே ப்ரதீப்பை பற்றி தான் பேசியது.
வைரல் பதிவு
இந்நிலையில், தற்பொழுது நடிகை வனிதாவை பிரதீப்பின் ஆதரவாளர்கள் யாரோ தாக்கிவிட்டதாக கூறப்பட்டது. இதனால் நடிகர் பிரதீப் தான் வனிதாவிடம் பேசியது குறித்த வாட்ஸ் ஆப் சேட்டை வெளியிட்டார். அந்த சமயத்தில் தன்னுடன் போட்டியாளர் ஐஷுவின் தண்தனி பேசிய சேட்டையும் அவர் வெளியிட்டார். பின்னர், ஒரு சில நிமிடங்களில் அதை டெலிட் செய்திருக்கிறார்.
மேலும், அந்த பதிவில், "நண்பா, எப்படி ஒவ்வொரு நாளையும் கடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த வாரம் ஐசு எலிமினேட் ஆனால் மிகவும் சந்தோஷப்படுவேன். நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால் தயவு செய்து நிக்சனிடம் இருந்து அவளை காப்பாற்றுங்கள். இப்போது ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று மெசேஜ் செய்திருக்கிறார். இதற்கு பிரதீப் உங்களுக்கு நான் எப்படி உதவி செய்வது என்பது தெரியவில்லை. அவளுக்காக என் பெயரை தவறாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள்.
எனக்கு தெரிந்து இந்த வாரம் அவள் வெளியே வந்து விடுவாள் என்று நினைக்கிறேன். அது மட்டும் தான் நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி. கவலைப்படாதீர்கள் எனக்கு தெரிந்து அவள் ஸ்ட்ராங்கான பெண் தான். அவள் எதையும் சமாளித்துக் கொள்வார் என்று பதிலளித்திருக்கிறார். அதற்கு ஐசுவின் அப்பா ஆமாம் உங்கள் பெயரை அவள் தப்பாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறாள்.
இதற்கு காரணம் மாயா மற்றும் பூர்ணிமா தான். தயவுசெய்து ஐசுவை மன்னித்து விடுங்கள். அவளுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதே தெரியவில்லை. பூர்ணிமாவை தான் வெளியே அனுப்பி இருக்க வேண்டும் ஆனால் நீங்கள் உள்ளே போனால் ஐசுவுக்கு சொல்லி புரியவைங்கள் வெளியில் இருக்கும் வெறுப்புகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.