யாஷிகாவை தொடர்ந்து ஐஷுவுடன் காதலா?.. பிக் பாஸ் பிரபலத்தின் அந்த பதிவு - அப்போ நிக்சன் நிலைமை?

Yashika Aannand Bigg Boss
By Vinothini Nov 01, 2023 04:30 PM GMT
Report

பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஐஷு சர்ச்சை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அசத்தலாக விளையாடி வருகிறார்கள். தற்பொழுது 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர் அதனால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

bigg-boss-aishu-boyfriend-sad-post

இங்கு மணி ரவீனா ஒரு பக்கம் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில் இப்போது புதிய காதல் ஜோடியாக மாறியுள்ளனர் நிக்சன் ஐஷு. சமீபத்தில் இவர்கள் இருவரின் காதல் கிசு கிசு தான் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து ஐஷு தனது வெளியில் ஒரு காதல் உள்ளதாக கூறியுள்ளார்.

திருமணமாகி ஒரு மாசம் தானே ஆச்சு.. அதுக்குள்ள இப்படியா? என்ன கோலம் இது? - ஷாக்!

திருமணமாகி ஒரு மாசம் தானே ஆச்சு.. அதுக்குள்ள இப்படியா? என்ன கோலம் இது? - ஷாக்!

பிரபலத்தின் பதிவு

இந்நிலையில், ஐசு காதலிக்கும் நபர் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நிரூப் தான் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இவர் ஏற்கனவே பிக் பாஸ் பிரபலமான யாஷிகாவை காதலித்து அவரை பிரிந்தார். பின்னர் அமீருடன் நெருக்கமாக பழகி வந்தார், சமீபத்தில் கூட ஐசுவின் சகோதரி பிறந்த நாள் பங்க்ஷனிலும் நிரூப் கலந்து கொண்டிருந்தார்.

bigg boss niroop

நிரூம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தான் சோகமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ஸ்டோரியாக வைத்திருக்கிறார். அதோடு அந்த புகைப்படத்திற்கு For this random click என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

அதனால் இதை பார்த்ததும் ரசிகர்கள் ஐசுவின் நடவடிக்கையை பார்த்து தான் நிரூப் சோகத்தில் இருக்கிறாரா? அதனால் தான் இப்படி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறாரா? என்று கேட்டு வருகின்றனர்.