திருமணமாகி ஒரு மாசம் தானே ஆச்சு.. அதுக்குள்ள இப்படியா? என்ன கோலம் இது? - ஷாக்!
நடிகர் அசோக் செல்வன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அசோக் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அசோக் செல்வன், தமிழில் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே போன்ற ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனில் ஓ மை கடவுளே படம் பெரும் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.
இதில் இவருடன் நடித்த ரித்திகா சிங்குடன் கிசுகிசு ஏற்பட்டது. இவர் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் ஹிட் ஆனது. மேலும் அடுத்ததாக அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார் மற்றும் சபா நாயகன் எனும் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், இவர் கடந்த மாதம் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 10 ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
தற்பொழுது இவரது லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், சிலர் திருமணமாகி 1 மாதமே ஆன நிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.