அருண்பாண்டியன் மகளை கரம் பிடித்தார் அசோக் செல்வன் - வைரலாகும் வெட்டிங் க்ளிக்ஸ்!
நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்துள்ளார்.
அசோக் செல்வன்
தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். ஏற்கனவே இருவருக்கு திருமணமாகிவிட்டது.
திருமணம்
நடிகையான கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு நடிகர் அசோக் செல்வனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
எளிமையாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. கல்யாண ஃபோட்டோஸ் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
