பிரபல நடிகரை மணக்கப்போகும் அருண்பாண்டியன் மகள் - குவியும் வாழ்த்து!
நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி பாண்டியன்
தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன்.

பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
திருமணம்
ஏற்கனவே இருவருக்கு திருமணமாகிவிட்டது. நடிகையான கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு நடிகர் அசோக் செல்வனுடன் திருமணம் நடக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை IBC Tamil