ஜாதி, மதம் வித்தியாசம் இல்லாத கட்சி பாஜகதான் - நிர்மலா சீதாராமன் பேச்சு!
பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க
சென்னை கொட்டிவாக்கத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,'' ஒரு அரசியல் கட்சிக்குப் பிரதான சாலையில் பெரிய கட்டிடம், 100 அடி உயரத்தில் மிகப்பெரிய கொடிக்கம்பம் ஆகியவை மட்டும் போதாது.
எளிய மக்களுக்குத் தேவையான அனைத்தையும் கிராம வாரியாக செய்து தர வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாகப் பெரிய அளவில் செய்து வருகிறது. மிகப்பெரிய கட்சி என்றால் அது பாஜக தான்.
நிர்மலா சீதாராமன்
பெரிய கட்சி என்று சொல்வதற்குக் காரணம் அதிக உறுப்பினர்கள் கொண்டதாகும். ஒரு கட்சியின் கொள்கையை நம்பி எத்தனை நிர்வாகிகள் சேர்கிறார்களோ, அதை வைத்துத்தான் அது பெரிய கட்சியா, அல்லது சிறிய கட்சியா என்பது தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ,''ஜாதி, மதம், சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் கட்சி பாஜகமட்டும் தான்.பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம் என்று கூறினார்.
மேலும் மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன? என்று கேள்வியெழுப்பினர்
பாஜகவில் மட்டும் தன திறமை உழைப்புக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படுகிறது . எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.