அதற்காக உலகம் முழுவதும் பிச்சை எடுப்பது என் வேலை - எச் ராஜா
பிரதமரை வெட்டுவேன் என பேசிய அமைச்சரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா பேசியுள்ளார்.
எச்.ராஜா
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை இந்து கோயில்களின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது. கோயில் பணத்தை வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக பழனியில் நல்ல நிலையில் இருக்கும் சுற்றுச்சுவரை இடித்து கட்டும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.
சேகர்பாபு
தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், அதன் மீது தமிழக அரசு அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறது. சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஆண்டுக்கு ரூ.90 ஆயிரத்துக்கு மட்டுமே வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ஒரு ஏக்கர் ரூ.90-க்கு ஒத்திகைக்கு கிடைக்குமா என அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்க வேண்டும்.
[
குத்தகை முடிந்த நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டதாக அரசு சொல்கிறது. அந்த நிலங்களுக்கு உலகம் முழுவதும் பிச்சை எடுத்து வேலி அமைப்பது என் வேலை. முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு அவர்கள் வேலி போட்டு பாதுகாப்பதில்லையா? அறநிலையத்துறை கோவில் நிலங்களை வேலி போட்டு பாதுகாக்க வேண்டும்.
தாமோ அன்பரசன்
பிரதமரை பீஸ் பீஸாக வெட்டுவேன் என பேசியவர் மந்திரியாக இருக்கலாமா? தாமே. அன்பரசனை முதலில் கைது செய்ய வேண்டும். இறையாண்மைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். காவல்துறையினரின் உடை கருப்பு சிவப்பாக மாறி விட்டதாக என சந்தேகம் வந்துள்ளது.
டாஸ்மாக் மற்றும் இந்து கோயில்களின் வருமானத்தால் தான் திமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது. சேகர்பாபுவுக்கு எதற்கு சம்பளம். முருகனுக்கு அரோகரா சொல்லாமல் அல்லேலூயா சொல்பவர் அமைச்சர் சேகர்பாபு" பேசியுள்ளார்.