விஜய் பெரியார் சிலைக்கு மாலை போட இதுதான் காரணம் - எச்.ராஜா
திராவிட கொள்கைகளுக்கு வெளியே தற்போது பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளதாக எச் ராஜா பேசியுள்ளார்.
எச்.ராஜா
தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் பேசிய அவர், மாநாட்டிற்கு அனுமதி கிடைக்காமல் விஜய் மூச்சுத்திணறலில் இருந்தார். தற்போது பல கண்டிஷன் போட்டு அவருக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்திருந்தாலும், அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை கட்சியாகதான் அரசியல் வாழ்க்கையை நடத்த முடியுமோ என்ற நிலைக்கு அவர் வந்து விட்டதாக தோன்றுகிறது.
மாநாட்டிற்கு அனுமதி
திராவிட கொள்கைகளுக்கு வெளியே தற்போது பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 18% வாக்கு கிடைத்தற்கு காரணம் இந்த வெற்றிடம்தான். இன்று கல்வி உலக மயமாகி வரும் நிலையில் அதை ,மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்என்ற குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.
வீட்டுக்கு மும்மொழி, நாட்டுக்கு இரு மொழி இத விட அயோக்கிய நிலை வேறு எதுவும் இருக்காது. அப்படி மற்றுமொரு திமுகவின் துணை காட்சியாக விஜய் மாறிக்கொண்டுள்ளார். இதனால் எங்கள் எதிர்பார்ப்பு கட்சியின் ஓட்டுகள் அவர் மூலமாக பிரிவது எங்களுக்கு மகிழ்ச்சிதான் என தெரிவித்துள்ளார்.
விஜய் ஈ.வெ.ரா சிலைக்கு மாலை அணிவித்ததால்தான் மாநாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளது. இல்லையென்றால் போய் இருக்க மாட்டார். இந்த அரசியலுக்கு மாற்று கொடுக்க வேண்டுமானால் கொள்கையில் மாற்றம் இருக்க வேண்டும் தானே. ஆனால் ஈயடிச்சான் காப்பி போல் அதே திராவிட கொள்கையை கிளி பிள்ளை போல் சொல்லிக்கொண்டிருந்தால் மக்கள் உங்களை மாற்றாக நினைக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.