மகன் இறப்பு; மோசமான பாரதிராஜா நிலை - இப்போ எப்படி இருக்கிறார்?
பாரதிராஜா குறித்து அவரது சகோதரர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
மனோஜ் இறப்பு
இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், தாஜ் மஹால் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம் என பல படங்களில் நடித்தவர்.
இறுதியாக, விருமன் படத்தில் நடித்திருந்த மனோஜ், கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். மனோஜின் இறப்பால் பாரதிராஜாவின் நிலமை மிகவும் மோசமானது.
இந்நிலையில் அவர் குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மனோஜின் இறப்பை பாரதிராஜாவால் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் அந்த இறப்பிலிருந்து அவர் மீளவில்லை.
பாரதிராஜா நிலை
இதை மறப்பதற்காக, என்னுடைய மகள் அவரை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்பட்டு கொஞ்ச நாள் அங்கே இருந்துவிட்டு வந்தார். மலேசியா சென்றபோதும் அவருக்கு மனோஜின் நினைப்பாகத்தான் இருந்தது.
பெயர் இருக்கு, புகழ் இருக்கு, பணம் இருக்கு. ஆனால், மகன் இல்லையே.. என்ற வருத்தம் அவரை வாட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வேதனை அவர் சாகும் வரையில் இருக்கும். மகன் இறந்ததிலிருந்து, அவர் எப்பொழுதுமே மனோஜின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டு, ஏதோ யோசித்துக்கொண்டே இருக்கிறார்.
அவருக்கு எங்கே இருக்கிறோம். என்ன செய்கிறோம் என்று எதுவும் தெரியவில்லை. ஞாபக சக்தியே இல்லை. என் மகன் இன்னும் இறக்கவில்லை என்று நினைத்துக்கொண்டுதான் நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.
எங்கே பார்த்தாலும் அவன் நிற்பது போலவும், அவனுடன் நான் பேசிக்கொண்டே இருப்பது போலவும் என் மனம் நினைக்கிறது என்பார் என தெரிவித்துள்ளார்.