குடும்பமே கடனில் தான் இருக்கு - ரோபோ சங்கர் குறித்து நாஞ்சில் விஜயன் வேதனை!

Tamil Cinema Robo Shankar Death Nanjil Vijayan
By Sumathi Sep 27, 2025 09:10 AM GMT
Report

ரோபோ சங்கரின் இழப்பு குறித்து நாஞ்சில் விஜயன் பகிர்ந்துள்ள தகவல் மனதை உருக்கியுள்ளது.

ரோபோ சங்கர் மறைவு

நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு குடும்பத்தினரையும், திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து அவருக்கு இருந்த குடிப்பழக்கம் தான் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது.

robo shankar

இந்நிலையில் இதுகுறித்து நாஞ்சில் விஜயன் அளித்துள்ள பேட்டியில், “ நடிகர் ரோபோ சங்கர் உயிருடன் இருக்கையில் அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக சரியான வேலை இல்லை. அவர் தற்போது இருந்த வீட்டிற்கு மாதம் இஎம்ஐ மாத்திரம் 1 லட்சம் வரை கட்ட வேண்டும்.

அவர் நம்பியிருந்த பிரபல தொலைக்காட்சியில் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை.இதனால் ஓடி ஓடி உழைத்தார். அவர் இல்லையென்றால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. கடன் சுமையால் இந்திரஜா சிறு சிறு விளம்பரங்களை கூட செய்து வருகிறார்.

அம்மாவின் உடலை கண்டு கதறிய நிரோஷா - பிரவுவை பார்த்ததும் வெடித்து அழுத ராதிகா!

அம்மாவின் உடலை கண்டு கதறிய நிரோஷா - பிரவுவை பார்த்ததும் வெடித்து அழுத ராதிகா!

நாஞ்சில் விஜயன் வேதனை

ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோதே ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது.அவ்வளவு பணத்தைச் செலவு செய்துதான் பிரியங்கா அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவ செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

nanjil vijayan

இந்திரஜா தாலி உட்பட அணிந்திருந்த அத்தனை நகைகளையும் மருத்துவமனையிலேயே கழட்டி கொடுத்தார். அதேபோல அவரது கணவர் கார்த்திக்கும் தன் கையில் அணிந்திருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் கழட்டி கொடுத்து தான் மருத்துவ செலவு செய்யப்பட்டது.

அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாக பார்த்தவன் நான். சோசியல் மீடியாவில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று நினைத்துவிடக்கூடாது, அவர்கள் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் தான் இருக்கிறது.

அதே போல ரோபோ சங்கரின் மனைவி இறுதி ஊர்வலத்தில் ஆடியதை சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள், இறுதி ஊர்வலத்தில் ஆடியது வேதனையின் உச்சத்தில் ஆடினார், தனது கணவருக்கு பிடித்ததை கடைசியாக செய்தார், அதை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

மடி குடித்ததும் ஒரு காரணமே தவிர, அது மட்டும் தான் காரணம் இல்லை. அவர் மேடைக் கலைஞராக இருந்தபோது உடம்பில் பூசிக்கொண்டிருந்த பெயிண்ட், ஓயாத உழைப்பு என எல்லாமே சேர்ந்துதான் அவருடைய உடல்நலக் குறைவுக்குக் காரணம்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.