நிறைவேறாத ரோபோ சங்கரின் அந்த ஆசை - கடைசி வரை செய்த முயற்சி!
ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 46. பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ரோபோ சங்கருக்கு நீண்ட நாட்களாக கமலுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்ததாக அவரது நண்பர் மதுரை முத்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேறாத ஆசை
ஆனால், அந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது. மேலும் இது தொடர்பாக நடிகர் ரவி மரியா கூறும்போது,
“கமல்ஹாசனுடன், ரோபோ சங்கர் இணைந்து நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என ஆசையும், அதற்கான முயற்சிகளிலும் ரோபோ சங்கர் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்தது ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.