ரேவதியை கன்னத்தில் பளார் விட்ட பாரதிராஜா - என்ன.. இதற்காகவா?
ஷூட்டிங் ஸ்பாட்டில் பாரதிராஜா ரேவதியை அறைந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
பாரதிராஜா
பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார்.
அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையில், மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜியில் பறவை கூட்டில் வாழும் மான்கள் என்ற கதையை இயக்கியிருந்தார்.
ரேவதி தகவல்
கடைசியாக கள்வன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் ண்வாசனை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ரேவதி கத்தி பேசுவதுபோல் காட்சியாம். ஆக்ஷன் என்று பாரதிராஜா சொன்னதும் ரேவதி கத்தி பேசவே இல்லையாம்.
பல முறை சொன்ன பாரதிராஜா ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ரேவதியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டாராம். அந்த அறையை வாங்கிய பிறகு பாரதிராஜா சொன்ன மாதிரி ரேவதி கத்தி பேசி டேக்கை ஓகே வாங்கியதாக ரேவதியே பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.