Thursday, May 8, 2025

கணவரை பிரிந்து 15 வருடம் கழித்து குழந்தை பெற்ற ரேவதி - மனம் திறந்து சொன்ன ரகசியம்?

tamilnadu-samugam
By Nandhini 4 years ago
Report

 ‘மண்வாசனை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரேவதி ஒரு காலக்கட்டத்தில் புகழ் பெற்ற நடிகையாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதனையடுத்து, தமிழ் சினிமாவில் பெரிய பெயரை பெற்ற நடிகை ரேவதி. சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே சுரேஷ் சந்திர மேனன் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்க்கையில் இருவரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த இவர்கள் கடந்த 2013ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு காரணம் ரேவதிக்கு குழந்தை இல்லை என்பது தானாம்.

இதனால், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்து 2002ம் ஆண்டே பிரிந்து விட்டனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்த ரேவதி தனது 5 வயதில் மகள் இருப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அது எப்படி இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து உங்களுக்கு குழந்தை? என ரேவதியிடம் வினவ... தனக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதை ஓப்பனாக சொல்லியிருக்கிறார் நடிகை ரேவதி.

ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் டியூப் பேபி என்ற முறையில் பெண் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறினார்.

தற்போது அக்குழந்தைக்கு 5 வயதாகிறது. கடைசி காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக இதைச் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கணவரை பிரிந்து 15 வருடம் கழித்து குழந்தை பெற்ற ரேவதி - மனம் திறந்து சொன்ன ரகசியம்? | Tamilnadu Samugam

கணவரை பிரிந்து 15 வருடம் கழித்து குழந்தை பெற்ற ரேவதி - மனம் திறந்து சொன்ன ரகசியம்? | Tamilnadu Samugam