ஒரு டைம் இங்க ட்ரை பண்ணுங்க.. விழுப்புரத்தில் சுவையில் அசத்தும் உணவகங்கள்!

Viluppuram Fast Food
By Vidhya Senthil Jul 23, 2024 07:00 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in கட்டுரை
Report

 விழுப்புரம் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது அதன் வளமான வரலாறு, பல்வேறு கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. அதிகம் அறியப்படாத இடமாக இருந்தாலும், அமைதியான மற்றும் அனுபவத்தைத் தேடும் பயணிகளுக்கு விழுப்புரத்தில் ஏராளமான இடங்கள் உள்ளன.

விழுப்புரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டை உள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டப்பட்ட ஒரு பெரிய மலைக்கோட்டை ஆகும். இது போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து முடித்துவிட்டு நல்ல வயிறார சைவ உணவுகளை ருசிக்க சில சைவ உணவகங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  

ஒரு டைம் இங்க ட்ரை பண்ணுங்க.. விழுப்புரத்தில் சுவையில் அசத்தும் உணவகங்கள்! | Best Places To Eat In Viluppuram

  ஹோட்டல் ஆர்யாஸ்:

இந்த உணவகம் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ளது. உயர்தர சைவ உணவகமான இது திண்டிவனத்தில் மிக பேமஸ் ஆனா ஹோட்டல் என கூறப்படுகிறது.

ஒரு டைம் இங்க ட்ரை பண்ணுங்க.. விழுப்புரத்தில் சுவையில் அசத்தும் உணவகங்கள்! | Best Places To Eat In Viluppuram

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் அங்கு சென்று விட்டு நேராக வந்து சாப்பிடும் இடம் இதுவாக தான் இருக்கும். இது ஒரு வசந்த பவன் உணவகத்திற்கு அடுத்ததாக உள்ளது,

இங்கு இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல் என பலவகையான உணவுகள் கிடைக்கிறது. எனவே குடும்பத்துடன் வேலூர் வந்தால் இந்த பிரபலமான சுவையான ஹோட்டலில் சாப்பிட மறக்காதீர்கள்.

புதிய மெனு - புத்துயிர் பெரும் அம்மா உணவகங்கள்

புதிய மெனு - புத்துயிர் பெரும் அம்மா உணவகங்கள்

ஷாப்பிங் சிங்கப்பூர் ஹோட்டல்

விழுப்புரத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய ஹோட்டல் ஷாப்பிங் சிங்கப்பூர் தான். இந்த உணவகம் காட்பாடி மெயின் ரோடு, தொட்டபாளையத்தில் அமைந்துள்ளது.

ஒரு டைம் இங்க ட்ரை பண்ணுங்க.. விழுப்புரத்தில் சுவையில் அசத்தும் உணவகங்கள்! | Best Places To Eat In Viluppuram

இங்கு அனைத்து வகை டிபன்களும் கிடைக்கிறது. குறிப்பாக சிக்கன் ரோல்ஸ், சமோசா மற்றும் பிரட் ஆம்லெட்கள் போன்ற பல்வேறு வகையான ஸ்நாக்ஸ்களும் உள்ளன. இது புகழ்பெற்ற உணவகங்களுக்கு இணையாக இந்த ஷாப்பிங் சிங்கப்பூர் சுவையை வழங்குகிறது.

எனவே குடும்பத்துடன் நெடுந்தூரம் பயணித்து இருப்பவர்கள் நிச்சயம் விழுப்புரம் பக்கம் வந்தால் இங்கு சாப்பிட்டு பாருங்கள்மக்களே.. 

  ஜம் ஜம் பிரியாணி

இந்த ஜம் ஜம் பிரியாணி விழுப்புரத்தில் மிக மிக பேமஸான இடமாகும். இவர்களது பிரியாணிக்கு விழுப்புரம் மக்களே அடிமை எனலாம்.

ஒரு டைம் இங்க ட்ரை பண்ணுங்க.. விழுப்புரத்தில் சுவையில் அசத்தும் உணவகங்கள்! | Best Places To Eat In Viluppuram

இந்த உணவகம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இந்த உணவகத்தில் பிரியாணி ,சிக்கன், மட்டன்,முட்டை ஆகிய பிரியாணி வகைகள் விற்கப்படுகிறது.

நல்லா தாராளமாக கொடுக்கப்படும் இறைச்சிகளும் சாப்பாடும் ரூ.100க்கு தருவார்கள். காரசாரமாய் சூப்பரான டேஸ்டில் விழுப்புர ஸ்டைல் பிரியாணி சாப்பிட இங்கு கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க. இந்த கடை நேருஜி சாலை, கலர்ஸ் அருகில், மந்தகரை, விழுப்புரம், வி. மருதூரில் அமைந்திருக்கிறது.

  ஸ்னாக்ஸ்

விழுப்புரம் செஞ்சி கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு, களைத்துபோனவர்கள், இங்குள்ள ஸ்னாக்ஸ் கடையை ட்ரை செய்து பார்க்கலாம்.

ஒரு டைம் இங்க ட்ரை பண்ணுங்க.. விழுப்புரத்தில் சுவையில் அசத்தும் உணவகங்கள்! | Best Places To Eat In Viluppuram

இந்த கடை விழுப்புரத்தில் எல்லிஸ் சத்திரம் சாலை, மூவேந்தர் நகரில் அமைந்துள்ளது.

இங்கு காபி, டீ, பிஸ்கட் ,போளி ,சமோசா, வடை, குலாப் ஜாமுன், கொழுக்கட்டை, ரவா லட்டு ,தேங்காய் லட்டு, கேக் ,ஜூஸ் மோஜிடோஸ், மில்க் ,ஷேக், ஸ்மூத்தி ஐஸ்கிரீம்உள்ளிட்ட உணவுகள் அனைத்தும் கிடைக்கும். இப்படிபட்ட உணவு வகைகள் அதன் தரத்திற்கு ஏற்ப 70 ரூபாயில் இருந்து கிடைக்கிறது .