வேலூரில் ருசியா சாப்பிடணுமா? இந்த இடங்களை கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க!
வேலூர் மாவட்டம்
வேலூர் என்றாலே புகழ்பெற்ற கோட்டை தான் நினைவிற்கு வரும்.பழமை வாய்ந்த இந்த நகரம் பல பண்டைய வம்சங்களின் ஆட்சியைக் கண்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இங்குள்ள உணவுகள் பண்டைய சமையலறைகளை பிரதிபலிக்கிறது.
வேலூருக்கும் உணவுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் பல வருடங்களாக தொடர்கிறது. அப்படி இந்த ஊருக்கு வருகை தருவோருக்கு சாப்பிடச் சிறந்த சில இடங்களை பற்றி காணலாம்.
சைவ உணவுகள்
வேலூரில் ஏராளமான புகழ்பெற்ற வழிபாட்டு தளங்கள் உள்ளது. அப்படி குடும்பத்துடன் சென்று பார்த்து முடித்துவிட்டு நல்ல வயிறார சைவ உணவுகளை ருசிக்க சில சைவ உணவகங்கள் இதோ,
ஹோட்டல் அலங்கார்
இந்த உணவகம் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. உயர்தர சைவ உணவகமான இது வேலூரில் மிக பேமஸ் ஆனா ஹோட்டல் எனப்படுகிறது. புகழ்பெற்ற கோயில் எதிரே உள்ளதால் பெரும்பாலான மக்கள் அங்கு சென்று விட்டு நேராக வந்து சாப்பிடும் இடம் இதுவாக தான் இருக்கும்.
பல வருடங்கள் பழமை வாய்ந்த இங்கு எல்லா வகை டிபன் வெரைட்டிகளும் கிடைக்கிறது. அதாவது இட்லி, தோசை, பூரி, பொங்கல், சேமியா(இடியாப்பம்), ரவா இட்லி, ரவா ஆனியன் தோசை, வெஜிடேபள் பொங்கல், கொழுக்கட்டை இன்னும் பல விதமான உணவுகள் கிடைக்கிறது.
எனவே குடும்பத்துடன் வேலூர் வந்தால் இந்த பிரபலமான சுவையான ஹோட்டலில் சாப்பிட மறக்காதீர்கள்.
சாய் சுப்ரபாதம் ஹோட்டல்
இந்த உணவகம் காட்பாடி மெயின் ரோடு, தொட்டபாளையத்தில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து வகை டிபன்களும் கிடைக்கிறது. மேலும் மீல்ஸ், பிரியாணி போன்ற சாப்பாடுகளும் கிடைக்கிறது.
நல்ல சுவையில், தரமான உணவுகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. தென்னிந்திய உணவுகள் மட்டுமின்றி வடஇந்திய உணவுக வகைகளும் விற்கப்படுகிறது. அதாவது புலாவ், பன்னீர் பட்டர் மசாலா, நான், பப்பட்,பாலக்,பன்னீர் டிக்க போன்றவை இருக்கிறது.
இந்த உணவகம் வாகனம் நிறுத்தத்துடன் தான் உள்ளது எனவே குடும்பத்துடன் நெடுந்தூரம் பயணித்து இருப்பவர்கள் நிச்சயம் வேலூர் பக்கம் வந்தால் இங்கு சாப்பிட்டு பாருங்கள்.
அசைவ உணவுகள்
வேலூர் மாவட்டத்தின் காரசார அசைவ உணவுகளின் சுவைக்கு நிகர் வேறெதுவும் இருந்திட முடியாது. அசைவம் விரும்பிகளுக்கு இந்த ஊர் ஒரு சொர்கம் என்று சொல்லாமல். அப்படியான ருசிகர சாப்பாட்டை ருசிக்க சில சிறந்த அசைவ உணவகங்கள் இதோ,
அம்மா பிரியாணி
இந்த அம்மா பிரியாணி வேலூரில் மிக மிக பேமஸான இடமாகும். இவர்களது பிரியாணிக்கு வேலூர் மக்களே அடிமை எனலாம். சுமார் 30 வருடங்கள் பழமையான இந்த உணவகத்தில் வெறும் பிரியாணி மட்டுமே கிடைக்கும்.இங்கு சிக்கன், மட்டன்,முட்டை ஆகிய பிரியாணிக்கு விற்கப்படுகிறது.
நல்லா தாராளமாக கொடுக்கப்படும் இறைச்சிகளும் சாப்பாடும் ரூ.180க்கு தருவார்கள். காரசாரமாய் சூப்பரான டேஸ்டில் வேலூர் ஸ்டைல் பிரியாணி சாப்பிட இங்கு கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க. இந்த கடை பழைய பஸ் ஸ்டாண்ட்,மண்டி தெருவில் அமைந்திருக்கிறது.
தி வேலூர் கிட்சேன்
இந்த உணவகம் வேலூர் நகரின் க்ரீன் சர்க்களில் அமைந்திருக்கிறது. இங்கு சவுத் இந்தியன்,நார்த் இந்தியன், அரேபியன்,சைனீஸ் ஆகிய அனைத்து வகை சாப்பாடுகளும் வித விதமாக இருக்கின்றன. ஒவ்வொரு டிஷ்ஷின் தரமும் சுவையும் அசர வைக்கும்.
அதாவது, டிபன் வெரைட்டிகள், சைவ மற்றும் அசைவ மீல்ஸ், ஸ்னாக்ஸ் வகைகள்,ஆட்டுக்கால் பாயா,ஐர மீன் குழம்பு, மீன் வறுவல்,நல்லி, காளான் கறி, பன்னீர் டிக்கா,நாட்டு கோழி மிளகு பிரட்டல் போன்றவை, ஐஸ் க்ரீம், இனிப்பு வகைகள் இன்னும் பல பல வெரைட்டிகளால் உங்களை அசத்துவார்கள்.
நம்ம வீடு உணவகம்
இந்த உணவகம் வேலூர் கொசபேட்டில் அமைந்திருக்கிறது. ஒரு நல்ல ஆம்பியென்சில் செம்ம ருசியா சாப்பிட இந்த உண்ணாவிகம் தான் பெஸ்ட் என வேலூர் மக்களே கூறுகின்றனர். இவர்களிடம் முழுக்க முழுக்க அசைவ உணவு வகைகள் மட்டுமே உள்ளது. வித விதமாய், ரக ரகமாய் அசைவ வெரைட்டிகளை தரமாக செய்து அசத்தி வருகின்றனர்.
இவர்களது சில பிரபல உங்களுக்கு என்னவென்றால்,அசைவ மீல்ஸ், அதில் களி,மீன் குழம்பு, கருவாடு குழம்பு,சிக்கன்,மட்டன் குழம்பு, முட்டை ப்ரை,ரசம்,கூட்டு,பொரியல்,இனிப்பு,தயிர்,அப்பளம்,சோறு ஆகியவை சேர்ந்து வருகிறது.
பிறகு, மட்டன் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி,தந்தூரி சிக்கன்,ஹரியாலி சிக்கன்,மலாய் சிக்கன்,பிரான்,சிக்கன் சுக்கா, டைனமைட் சிக்கன்,முட்டை பெப்பர் மசாலா ஆகியவை இவர்களது பிரபல உணவுகளாகும்.
ஸ்னாக்ஸ்
வேலூர் கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு, களைத்துபோனவர்கள், இங்குள்ள ஸ்னாக்ஸ் ஒரு திருப்திகரமான நிறைவை கொடுக்கும், உங்கள் மாலை வேளை பசியை தீர்க்க சில சிறந்த தள்ளு வண்டி உணவுகள் இதோ,
கொத்து சேமியா
வேலூரில் ரொம்போ பேமஸ் என்றால் அது கொத்து சேமியா தான். மிகவும் தனித்துவமான இந்த உணவை சுற்றுலா வருபவர் நிச்சயமாக சாப்பிட வேண்டிய ஒன்றாகும். அதிலும் இந்த மீன் கொத்து சேமியா, சிக்கன் சேமியா, முட்டை மீன் சேமியா ஆகியவையின் சுவை செம்மையாக இருக்கும்.
இப்படிபட்ட உணவு கோட்டைக்கு வெளியே உள்ள பெரும்பாலான தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கிறது.இதன் விலை 50 ரூபாயில் தொடங்கி 70 ரூபாய்க்குள் கிடைக்கிறது.