புதிய மெனு - புத்துயிர் பெரும் அம்மா உணவகங்கள்
ரூ 5 கோடி செலவில் அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா
கடந்த 2013 ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மிக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு 400க்கும் அதிகமான அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. கொரோன காலத்திலும், புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் போதும் அம்மா உணவகம் மிகவும் கை கொடுத்தது.
மு.க.ஸ்டாலின்
2021 ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, திமுக அரசு அமைத்தபோது அம்மா உணவகம் திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுப்பட்டபோது திட்டம் தொடரும் என்று அறிவித்தார்.
அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் தற்போது வரை பராமரிப்பு செய்யபடாமல் பாழடைந்து உள்ளது. பல கட்டிடங்களின் உள் பகுதியில் எண்ணெய் படிந்து சுவர்கள் மிகவும் அசுத்தமாக உள்ளன. பல இடங்களில், போதிய மின் விளக்குகள் இல்லாமலும் உள்ளன.
புதிய மெனு
இதனால் நாளடைவில் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பெரும்பாலான அம்மா உணவகங்களில் முன்பு போல உணவுகள் விற்பனையாவது இல்லை. கட்டங்களின் சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவு நீர் கட்டமைப்பை உருவாக்குவது, பழுதான மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றுக்கு பதிலாக புதிது வாங்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், புதிய மெனுக்களை அறிமுகப்படுத்தி மக்களை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.