அமெரிக்காவில் அம்மா உணவகம் - அன்பால் அசத்தும் இந்தியர்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆட்சிக் காலத்தின்போது அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.
அம்மாஸ் கிச்சன்
இதில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் குறைந்த விலையில் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டது. அதேபோல் அமெரிக்காவின் நியூயார்க் அருகே உள்ள நியூஜெர்சியில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகம் ஒன்று இயங்கிவருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் இருப்பது போல் அங்கேயும் விலை குறைவான உணவுகள் வழங்கப்படுகிறது என்று தமிழ் ஃபுட் ப்ளாகர் ஒருவர் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதில் 18 டாலருக்கு அன்லிமிடெட் அசைவ உணவுகளும் உண்டு என்றும் இந்திய உணவுகளை தேடுபவருக்கு இது நல்ல உணவகமாக இருக்கும்.
அமெரிக்காவில் உதயம்
இந்த உணவகத்தின் முன் பகுதியில் கல்யாண விருந்துக்கான டைனிங் போல அமைக்கப்பட்டு வாழை இலை போட்டு அங்கு உணவு பரிமாறுகிறார்கள். பின்புறத்தில் Buffet சேவையும் இருக்கிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர் தினேஷ் ஒரு இந்தியர்.
இவர் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அன்பாலும், மரியாதையாலும் பல இடங்களில் உணவகம் நடத்தி வருகிறார்.
“நாங்கள் அவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் கூட, அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்” என தெரிவித்துள்ளார்.