கடலூர் வந்துட்டு கம கம'ன்னு சாப்பிட இடம் தேடுறீங்களா..?இதோ உங்களுக்காக...
கடலூர் தமிழகத்தின் கடல்சார் தொழில்களுக்கு மிக முக்கிய மாவட்டமாக திகழ்கிறது. சென்னை - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இம்மாவட்டம் அதன் கடல்சார் உணவுகளுக்கு புகழ் பெற்ற இடமாக உள்ளது.
அப்படி தென் தமிழகம் ட்ரிப் போயிட்டு இருக்கும் போது, கடலூர் தாண்டும் போது பசிச்சா, சாப்பிட வேண்டிய இடங்களை காணலாம்.
பலகாரம்.com
கடலூர் சிதம்பரத்தில் அமைந்துள்ள சைவ உணவகம்,பலகாரம்.காம். தென்னிந்திய உணவு வகைகளுக்கே இங்கு முக்கியத்துவம் வழங்கப்டுகிறது.
வெஜ் ஹோட்டலான இதில், காலை டிபனில் துவங்கி மதிய வீட்டு சாப்பாடு, இரவு டிபன் என பட்டியல் நீளுகிறது. சிதம்பரம் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலுக்கு அருகாமையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது மற்றுமொரு சிறப்பு. சாலட்(salad) வகைகளில் இங்கு மிஸ் பண்ண கூடாதவை.
ஸ்ரீ கிருஷ்ண விலாஸ்
பசிக்குது ஆனா வெஜ் ஹோட்டல் தான் அப்படி'னு தேடுனா..உங்களுக்கான option'இல் இருக்க வேண்டிய இன்னொரு ஹோட்டல் இந்த ஸ்ரீ கிருஷ்ண விலாஸ்.
சிதம்பரத்தில் மிகவும் பேமஸ் ஹோட்டல். தமிழ்நாட்டு முறையில் உணவு வகைகளை பரிமாறப்படுகின்றது கூடுதல் சிறப்பு. வெஜ் ஹோட்டலில் நான் தேடும் அனைத்து வகை உணவும் இங்கு பரிமாறப்படுகின்றன. சாம்பாரின் சுவை ருசித்தவர்கள் அதை பற்றி குறிப்பிட தவறுவதில்லை.
உடுப்பு ஸ்ரீ கிருஷ்ண விலாஸ்
வெளி ஊர் செல்பவர்களுக்கு அங்குள்ள பழமையான உணவகங்களை தேடி, பாரம்பரிய முறையில் சாப்பிட பெரும்பாலும் விரும்புவார்கள். அப்படி கடலூர் வந்தால் உங்கள் சாய்ஸில் இருக்க வேண்டிய ஒரு இடம் உடுப்பு ஸ்ரீ கிருஷ்ண விலாஸ்.
வாழை இலைகளில் உணவுகளை பரிமாறுவதே இங்கு தனி சிறப்பாக உள்ளது. நீண்டகாலமாக மக்களின் பசியை ஆற்றி வரும் இந்த உணவகம், தனது தனித்துவமான டிபன் வகைகளுக்கு பிரபலமான ஒன்றாகும். மசாலா தோசை must try என்கிறார்கள் விசிட் செய்தவர்கள்.
அறுபடை வீடு
கடலூர் வந்துட்டு கடல் சார் உணவுகளை சாப்பிடமா போகலாம்? மீன் வகை உணவுகள் உங்களை ஈர்க்கும் என்றால் நேராக கடலூரில் அறுபடை வீடு சென்றுவிடுங்கள்.
வீட்டில் சமைத்த உணவு போன்ற ஒரு உணர்வை நினைவூட்டுகிறது இந்த உணவகம் என சாப்பிட்டவர்கள் பலரின் கமெண்ட். சுட சுட மீன் குழம்பும், வறுத்த மீன் வகைகளும் இங்கு தவறவிட கூடாதாவை என்றும் கூறுகிறார்கள் டேஸ்ட் பார்த்தவர்கள்.
பீச் கிரில்
யாருக்கு தான் BBQ உணவுகள் பிடிக்காது. கடலூர் ஏரியா;ல ட்ரிப் போயிட்டு இருக்கும் போது, BBQ சாப்பிடணும்'னு நீங்க முடிவு பண்ண, உங்களுக்கான இடமாக நிச்சயம் இந்த பீச் கிரில் இருக்கும்.
திறந்தவெளி கடையான traditional Middle east BBQ வகைகளை பரிமாறி வருகின்றது இக்கடை. ஷவர்மா வகைகளில் துவங்கி, பல வகையான BBQ உணவுகள் மட்டுமின்றி தென்னிந்திய உணவு வகைகளும் உள்ளன என்பது இங்கு கூடுதல் சிறப்பு.
நூடுல் ஹவுஸ்
BBQ'க்கு பிரியர்களுக்கு ஒரு option எப்படி போதும். அதனால் தான் உங்களுக்காக மற்றுமொரு option இந்த noodles house. பேரு தான் noodles. ஆனா BBQ தான் இங்க பேமஸ்.
சைனீஸ், கொரியன், continental வகை உணவுகள் மக்களை இந்த உணவகம் நோக்கி ஈர்க்கிறது. இங்கே வந்தவர்கள் தவறாமல் ஏனோ குறிப்பிட்டு சொல்லும் ஒரு விஷயம் புத்துணர்ச்சியூட்டும் புதினா நீர்(Refreshing Mint Water)
ஐஸ் அன் கபே
சாயந்திரம் சுத்திட்டு இருக்கும் போது, என்னடா சாப்பிடுறது'னு யோசனையா இருந்தா டக்குனு மனசு'ல வரது sandwitch வகைகள் தான்.
அப்படி நீங்க சாப்பிட ஒரு கடையை தேடினால், உங்களுக்கானது தான் இந்த ஐஸ் அன் கபே. Sandwitch, Pasta Pizza வகைகளுக்கு இக்கடை அப்பகுதியில் மிகவும் பிரபலமாகும். அதே நேரத்தில் juice வகைகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் பல starter வகைகளை பரிமாறுகிறார்கள்.